கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நீடாமங்கலம் அருகே ஆதனூரை சேர்ந்த கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

நீடாமங்கலத்தை அடுத்த ஆதனூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன் (வயது40). கஞ்சா வியாபாரி. இவர் கடந்த மாதம் 18-ந்தேதி கஞ்சா விற்ற போது அவரை போலீசார் கைது செய்து மன்னார்குடி சிறையில் அடைந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கஞ்சா வியாபாரி மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மன்னார்குடி கிளை சிறையில் இருந்த மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story