லாரியில் கஞ்சா கடத்தியவா் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


லாரியில் கஞ்சா கடத்தியவா் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

விக்கிரமசிங்கபுரத்தில் லாரியில் கஞ்சா கடத்தியவா் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் ராமானுஜம்புதூர், இந்திராநகரை சேர்ந்த வானுமாமலை என்பவரின் மகன் தளவாய்மாடன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோருக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் பரிந்துரைத்தார். அதன்பேரில் கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, தளவாய் மாடனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று போலீசார் வழங்கினர்.


Next Story