2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லூவியரசன் (வயது 29), பாணாவரத்தை அடுத்த கீழ் வீராணம் மோட்டூர் ரோடு தெருவை சேர்ந்த சரவணகுமார் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story