2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த கீழ்வீராணம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 34). திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (34). இவர்கள் இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு பேரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் கண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.


Next Story