3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 50). இவர் நெல்லை பகுதியில் அடிதடி, புகையிலை விற்பனை வழக்குகளில் சிக்கி கங்கைகொண்டான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உவரி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் சொத்து பிரச்சினையால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் பங்களா தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை அருகே உள்ள மானூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சுடலையாண்டி (38). இவர் அடிதடி, கொலை முயற்சி செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகல் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களால் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.


Next Story