கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சோளிங்கர் அருகே கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட ஐப்பேடு பகுதியை சேர்ந்த அசோக்பாண்டியன் (வயது24,) கோபி (24,) தாமோதரன் (24) ஆகியோரை சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அசோக்பாண்டியன், கோபி, தாமோதரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story