6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவில் பணியாளர் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே உள்ள மேலச்செவலை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி. கோவில் பணியாளர். இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலச்செவலை சேர்ந்த கொம்பையா (வயது 19), பாலசந்துரு (23), பற்பநாதன் (19), மாரியப்பன் (19), அய்யப்பன் (23) மற்றும் செல்லக்குட்டி என்ற துரை (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் கார்த்திகேயன், 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் நேற்று மதுரை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.