கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன் விளையை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோட்டை சேர்ந்த சிவசங்கர் (வயது 35) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து சிவசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது சிவசங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.


Next Story