கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஷ் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதாக ஸ்ரீரங்கம் இந்திரா நகரை சேர்ந்த பாலாஜி (வயது 25) என்பவரையும், இதேபோல் திருவானைக்காவல் பள்ளிவாசல் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்து சென்றதாக ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற அமாவாசை (21) என்பவரையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலாஜி, கோவிந்தராஜ் என்கிற அமாவாசை ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.


Next Story