மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஶே்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பாலாறு செல்வதால் பல்வேறு இடங்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது. மணல் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மணல் கடத்தல் சம்பந்தமாக 80 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 80 பேர் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 லாரிகள், 1 பொக்லைன் எந்திரம், 14 டிராக்டர்கள், 49 மாட்டுவண்டிகள் என மொத்தம் 85 வாகனங்கள் மற்றும் 37 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story