தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி


தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த  கஞ்சா வியாபாரி
x

தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆற்காட்டில் உள்ள மாசாப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற பகுடு (வயது 33). கஞ்சா வியாபாரி. இவரது மனைவி துர்கா (28). இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடு புகுந்து தாய், மகள் ஆகிய 2 பேரை கத்தியை காட்டி மிரட்டி, நிர்வாண வீடியோ எடுத்தனர். மேலும் தாய், மகளை பாஸ்கர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கர், அவரது மனைவி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பாஸ்கரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில், கஞ்சா வியாபாரி பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.


Next Story