கஞ்சா வியாபாரிகள் கைது


கஞ்சா வியாபாரிகள் கைது
x

கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை - உவரி பைபாஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியில் நின்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வமருதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 23), திசையன்விளை நெடுவிளையை சேர்ந்த மதன் (23), சங்கனாங்குளம் திருவடகரியை சேர்ந்த சங்கர்ராஜா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கஞ்சா மொத்த வியாபாரிகள் என்பது தெரியவந்தது.


Next Story