ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய ெபண்கள் உள்பட 5 பேர் கைது


ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய ெபண்கள் உள்பட 5 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய ெபண்கள் உள்பட 5 பேர் கைது

மதுரை

கோவிலுக்கு மாலை அணிந்து செல்வதாக கூறிவிட்டு, ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்த பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல்

மதுரை தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வைகை ஆற்று பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை நிறுத்தி விசாரித்தனர். அதில் சம்மட்டிபுரத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது மனைவி சிவராணி என தெரியவந்தது. மேலும் அவர்கள் வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மனைவி உஷா, அதே பகுதியை சேர்ந்த திருக்கம்மாள், சம்மட்டிபுரம் ராஜூவ் நகர் பகுதியை சேர்ந்த ரேவதி ஆகியோர் சேர்ந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிவித்து குழந்தைகளுடன் செல்வதாக கூறிச்சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று மொத்தமாக கஞ்சா வாங்கி பண்டல் பண்டலாக பிரித்து மதுரைக்கு கடத்தி வந்தனர். அதனை பிரித்து விற்பனைக்கு கொடுத்ததும் தெரியவந்தது.

5 பேர் கைது

தம்பதி கொடுத்த தகவலின் பேரில் மாட்டுத்தாவணி பகுதியில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த ரேவதி, உஷா, திருக்கம்மாள் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story