கஞ்சா விற்றவர் கைது
தேனி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் கோடாங்கிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தேவர் சிலை அருகில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதற்குள் 3 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், உத்தமபாளையம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த கென்னடி மகன் மணி என்ற ஆனந்தன் (வயது 25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணி என்ற ஆனந்தனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story