ஆற்காடு அருகே கஞ்சா விற்றவர் கைது
ஆற்காடு அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story