தஞ்சை மாநகராட்சிக்கு குப்பை தொட்டிகள்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் ரூ.2½ கோடி மதிப்பிலான குப்பைத்தொட்டிகளை தூய்மை காவலர்களிடம், மேயர் சண்.ராமநாதன் வழங்கினார்.
ரூ.2½ கோடியில் குப்பை தொட்டிகள்
இந்த குப்பைகளை தூய்மை காவலர்கள் தினந்தோறும் சென்று பொதுமக்களிடம் வாங்கும் வகையில் அதற்கேற்றவாறு குப்பைத் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் "குப்பையில்லா தஞ்சை, குற்றமில்லா நகரம்" என்ற கொள்கையின்படி தஞ்சை மாநகராட்சியின் 15-வது நிதிக்குழுவின் கீழ் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் 312 பெரிய அளவிலான வாகனங்களில் ஏற்றிச்செல்லும் வகையில் இரும்பு குப்பைத்தொட்டிகளும், 207 சிறிய அளவிலான பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த குப்பைத்தொட்டிகளை நேற்று பயன்பாட்டுக்காக தூய்மை காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மண்டலக்குழு தலைவர் மேத்தா, மாநகராட்சி பொறியாளர்கள் கார்த்திகேயன், அறச்செல்வி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.