கீழ்வேளூர் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிப்பு மையம்


கீழ்வேளூர் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிப்பு மையம்
x

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் வகையில் கீழ்வேளூர் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என செயல் அலுவலர் குகன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் வகையில் கீழ்வேளூர் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என செயல் அலுவலர் குகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போகி பண்டிகை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் புலையில்லா போகி பண்டிகை இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி வீீடுகளில் உள்ள பழை பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். இதனால் ஏற்படும் புகைமூட்டதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழக அரசு இந்த ஆண்டு 'புகையில்லா போகி' கொண்டாடும் வகையில் அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் பழைய கழிவுகளை சேகரிப்பதற்கான சேகரிப்பு மையங்கள் அமைத்து, பழைய கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள். டயர்கள். துணிகள் போன்றவை சேகரித்து, திறந்த வெளியில் எரியூட்டப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். சேகரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.

குப்பைகள் சேகரிப்பு மையம்

மேலும் அறிவிப்பு பலகைகள் பொது மக்கள் அறியும் வகையில் பேரூராட்சி பகுதியில் வைக்க வேண்டும் என்று அனைத்து பேரூராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கீழ்வேளூர் பேரூராட்சி வளாகத்தில் குப்பைகள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து போட வேண்டும்.

இந்த மையத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். புகையில்லா போகி பண்டிகை கொண்டாடி கீழ்வேளூர் பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story