ஊராட்சிகளுக்கு ரூ.2¾ கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்


ஊராட்சிகளுக்கு ரூ.2¾ கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
x

ரூ.2¾ கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

ரூ.2¾ கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிப்பதற்கு மோட்டார் பொருத்திய வாகனங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பில் இவை வழங்கப்பட்டது.

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எஸ்.அருணாசலம் வரவேற்றார்.

விழாவில் 69 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 52 ஊராட்சிகளுக்கு 86 வாகனங்களும், வேங்கிக்கால் உள்பட 6 ஊராட்சிகளுக்கு குப்பைகளை எடுத்துச் செல்ல டிராக்டர்கள் என மொத்தம் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பில் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கப்பட்டது. கலெக்டர் முருகேஷ், டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் வாகனங்களை இயக்கி பார்த்தனர்.

விழாவில் ஆணையாளர் மெ.பிரித்விராஜன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் த.ரமணன், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி தமிழ்செல்வன் உள்பட கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) கே.எம்.பழனி நன்றி கூறினார்.


Next Story