குப்பையில் வீசப்பட்ட வைர கம்மல் மீட்பு


குப்பையில் வீசப்பட்ட வைர கம்மல் மீட்பு
x

குடியாத்தத்தில் குப்பையில் வீசப்பட்ட வைர கம்மல் மீட்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பலமநேர் ரோடு அம்பேத்கர் சிலை அருகே வசிப்பவர் கல்பனா. இவர் தீபாவளியன்று குடும்பத்துடன் வீட்டில் சாமிகும்பிட்டுள்ளார். அப்போது பூஜையில் நகைகள் மற்றும் ஒரு ஜோடி வைர கம்மலை வைத்து பூஜை செய்துள்ளார். பூஜைக்கு பின் பூஜை அறையை சுத்தம் செய்தபோது வாடி இருந்த பூக்கள் மற்றும் பூஜையிலிருந்த பொருட்களை வீட்டுக்கு அருகில் குப்பை சேகரிக்கும் பகுதியில் போட்டுள்ளார். கவனக்குறைவாக வைர கம்மலையும் குப்பையில் போட்டுள்ளார்.

பின்னர் நகையை சரிபார்த்தபோது வைர கம்மல் இல்லாததை அறிந்த அவர் குப்பை கொட்டிய இடத்துக்கு சென்றார். அதற்குள் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றுவிட்டனர். உடனடியாக இதுகுறித்து குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசனுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் அந்த குப்பை வண்டியை வரவழைத்து குப்பைகளை கொட்டி தூய்மை பணியாளர்கள் மூலம் தேடியபோது அதில் 2 வைர கம்மல் இருந்தது. அதை நகர மன்ற தலைவர் சவுந்தரராசன், கல்பனாவிடம் வழங்கினார். தி.மு.க. நகர அவைத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story