ராஜாமடம் வாய்க்கால் கரையில் குப்பைகள் அகற்றம்
ராஜாமடம் வாய்க்கால் கரையில் குப்பைகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ராஜாமடம் வாய்க்கால் கரையில் குப்பைகள் அகற்றப்பட்டது.
ராஜாமடம் வாய்க்கால்
பட்டுக்கோட்டை நகரில் மதுக்கூர் ரோடு முத்துப்பேட்டை ரோடு இணையும் ராஜாமடம் கிளை வாய்க்கால் கரை சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கில் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜாமடம் வாய்க்கால் கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்கள், ஆஸ்பத்திரி கழிவுகள் குவிந்து கிடந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
குப்பைகளை அகற்றக்கோரிக்கை
மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. மேலும் அங்கு துர்நாற்றமும் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே இந்த சாலையில் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, சாலையை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இகுதுறித்து செய்தி 'தினத்தந்்தி'யில் கடந்த 19-ந்தேதி படத்துடன் பிரசுரமானது.
நன்றி
இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு குவிந்துகிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றி, தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.