நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகள்


நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகள்
x

நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பூர்

குடிமங்கலம்

ராமச்சந்திராபுரம் அருகே கழிவுகளைக் கொட்டி நீர் வழித்தடங்கள் மூடப்படுவதால் மழை நீர் வீணாகி வருகிறது.

நீர் வழித்தடம்

ராமச்சந்திராபுரம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.ஆனாலும் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் தென்னை மரங்கள் கருகியது.இதற்கு போதிய மழைப்பொழிவு இல்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், பராமரிப்பில்லாத நீர் வழித்தடங்கள் முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது'சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழை என்பதை வரமாகப் பார்த்த நிலை மாறி சாபமாகப் பார்க்கும் நிலை உருவாகி விட்டது.இதற்கு மழைநீர் வடிகால்கள், நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதும் காரணமகும்.மழைநீர் வடிகால்களை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.பொதுவாக பள்ளமான இடங்களை எல்லாம் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடமாகப் பார்க்கும் மனநிலை பலரிடம் காணப்படுகிறது.

நடவடிக்கை

ராமச்சந்திராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் கழிவுகளைக் கொட்டி நீர் வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் பகுதிகள், உப்பாறு ஓடை உள்ளிட்ட இடங்களில் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் நீர்நிலைகள் நிறைந்து நிலத்தடி நீர் மட்டம் உயரவும் விவசாயிகள் பயன்பெறவும் முடியும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Next Story