பழனியில் 'குப்பை இல்லா இந்தியா' விழிப்புணர்வு ஊர்வலம்


பழனியில் குப்பை இல்லா இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Sept 2023 2:30 AM IST (Updated: 18 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் ‘குப்பை இல்லா இந்தியா' விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்

'தூய்மை இந்தியா' திட்டத்தின் 9-ம் ஆண்டு நிறைவையொட்டி பொதுமக்களுக்கு 'குப்பை இல்லா இந்தியா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்படி, பழனி நகராட்சி சார்பில், 'குப்பை இல்லா இந்தியா' குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பழனியில் நேற்று நடைபெற்றது. முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'தூய்மை இந்தியா' குறித்த உறுதிமொழியை நகராட்சி பணியாளர்கள் எடுத்தனர். பின்னர் ஆணையாளர் பாலமுருகன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம், பெரியார் சிலை சந்திப்பு, ஆர்.எப்.ரோடு, மயில் ரவுண்டானா, திண்டுக்கல் ரோடு, காந்தி ரோடு வழியே சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது, "நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். அதோடு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.


Next Story