சாலையோரத்தில் தீயிட்டு எரிக்கப்படும் குப்பைகள்


சாலையோரத்தில் தீயிட்டு எரிக்கப்படும் குப்பைகள்
x

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே சாலையோரத்தில் தீயிட்டு எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே சாலையோரத்தில் தீயிட்டு எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலையோரத்தில் குப்பை

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த ரவுண்டானா வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.குறிப்பாக வல்லம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி மற்றும் அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கான முக்கிய வழித்தடமாகும்.

புகை மூட்டம்

இதன்காரணமாக ரவுண்டானா அருகே உள்ள சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கொள்கிறது. இவற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

சாலையை சூழ்ந்து கொள்ளும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Next Story