சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்


சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி குவிந்துள்ளது. தினந்தோறும் மேற்கண்ட சாலையின் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகங்களுக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story