வெண்ணிக்காலாடி படத்துக்கு மாலை அணிவிப்பு
நெற்கட்டும் செவல் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மாவீரன் ஒண்டிவீரன், வெண்ணிக்காலடி ஆகியோர் படங்களுக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர்:
பா.ஜ.க. பிரமுகரும், தொழிலதிபருமான விஸ்வை அ.ஆனந்தன் தலைமையில், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்கட்டும் செவல் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மாவீரன் ஒண்டிவீரன், வெண்ணிக்காலடி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்பிறகு வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் ஏற்பாட்டில், ராயகிரியில் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுடன் மதிய உணவு ஏற்பாடு செய்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ.க. பிரமுகரும், தொழில் அதிபருமான விஸ்வை அ.ஆனந்தன், தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவருமான ராம்குமார், பொதுச்செயலாளர் சிவராஜா, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஒன்றிய பொருளாளர் கங்காதரன், மாவட்ட ஓ.பி.சி. பிரிவு துணைத்தலைவர் தங்கம், ஒன்றிய பிரசார பிரிவு தலைவர் வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.