கியாஸ் மூலம் இயங்கும் தனியார் பஸ்
தமிழகத்தில் முதன்முறையாக கியாஸ் மூலம் தனியார் பஸ் இயக்கப்படுகிறது
தமிழகத்தில் முதன்முறையாக கியாஸ் மூலம் தனியார் பஸ் இயக்கப்படுகிறது
கியாஸ் பஸ்
தமிழகத்தில் முதல் முறையாக சி.என்.ஜி. கியாஸ் மூலம் பல்லடத்தில் தனியார் பயணிகள் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. விரைவில் புளியம்பட்டியிலிருந்து பல்லடம் வழியாக திருப்பூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இது குறித்து பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:-
இந்த பஸ்சில் 600 லிட்டர் டீசல் கொள்ளளவு கொண்ட டேங்க், 90 கிலோ சி.என்.ஜி. கியாஸ் நிரப்பும் வகையில் 4 கியாஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.94 ஆகிறது. கியாஸ் ஒரு கிலோ ரூ.82 தான். அதே சமயம் டீசல் மூலம் இயக்கினால் ஒரு லிட்டருக்கு 3½ கிலோ மீட்டர் தூரம் தான் இயக்க முடியும். கியாஸ் மூலம் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட்டமுடியும். எரிபொருள் செலவும் குறைகிறது. கிலோ மீட்டரும் அதிகம் கிடைக்கிறது.
மேலும் அரசு நகர பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிப்பால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்தை பெருக்க
ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் ஆகும். பயணிகள் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்த வாய்ப்பு இல்லை. அதனால் செலவை குறைத்து வருமானத்தை பெருக்க சி.என்.ஜி. கியாஸ் கிட் பொருத்தியுள்ளோம். மாட்டு சானத்தில் இருந்து கிடைக்கும் கியாஸ் மூலம் இந்த பஸ்சை இயக்க முடியும். சி.என்.ஜி. கியாஸ் கிட் பஸ் புதியதாக வடிவமைக்க மொத்தம் ரூ.40 லட்சம் செலவு ஆகும். எங்களது பஸ் சேவை மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.