எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:12 AM IST (Updated: 29 Jun 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக எரிவாயு (கியாஸ் சிலிண்டர்) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story