எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:18 AM IST (Updated: 29 Jun 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை)மதியம் 3 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு வினியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story