தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் பதிவு மற்றும் வினியோகம் செய்வதில் எரிவாயு முகவர்களால் செய்யப்படும் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story