எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை, நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story