கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
ஆரணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஆரணி
ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் 24-வது வார்டில் ஜீவா, அவரது மகள் அபிராமி ஆகியோர் ஓலை வீட்டில் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று பொங்கல் திருநாள் அன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வீட்டிலிருந்த ஜீவா, அபிராமி இருவரும் வெளியே ஓடி வந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தீ அதிகளவில் பரவி கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் துணிமணிகள் அனைத்தும் கருகின. தீ அதிகமாகவே அருகில் உள்ள மற்றொரு சிலிண்டர் வெடித்து விடும் என்ற நிலை ஏற்பட்டது.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபோது தீயணைப்பு வாகனம் குன்னத்தூர் பகுதியில் கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்காக சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பெரணமல்லூர் பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, நகரமன்ற உறுப்பினர்கள் ரேணுகாம்பாள் தயாளன், சுப்பிரமணி சென்று ஆறுதல் கூறினர்.