கயத்தாறுதாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி


கயத்தாறுதாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கி, நடந்து வருகிறது. முதல் நாள் செட்டிகுறிச்சி, பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை தெற்கு கோனார் கோட்டை, மற்றும் சரவணாபுரம் ஆகிய கிராம மக்களிடமிருந்து மனுக்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக தனித்துணை கலெக்டர் கிறிஸ்டி பெற்றார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜ், சமுக பாதுகாப்பு தாசில்தார் ஐயப்பன், வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story