கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
தூத்துக்குடியில் கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி 18-வது ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பள்ளி தாளாளரான அமைச்சர் கீதாஜீவன் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி துணை முதல்வர் காளீஸ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story