இடையக்கோட்டையில் கின்னஸ் சாதனை முயற்சிக்கான பணிகள் தீவிரம்
இடையக்கோட்டையில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் கின்னஸ் சாதனை முயற்சிக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இடையக்கோட்டையில் இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நிலம் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த நிலப்பகுதியை அடர்காடாக மாற்றும் வகையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முடிவு செய்தார். இதற்காக நிலத்தை சுத்தப்படுத்தி பல்வேறு வகையான மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்தார்.
அதையும் ஒரே இடத்தில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை முயற்சி செய்யவும் அவர் யோசனை கூறினார். அதன்படி, வருகிற 23-ந்தேதி அந்த நிலத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற உள்ளது. இதில் கின்னஸ் நடுவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் வழங்க உள்ளனர்.
இதையொட்டி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சி.ராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.தங்கராஜ் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் மரக்கன்றுகள் நடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆலோசனை கூறினார்கள்.
இந்த ஆய்வின்போது, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜ்குமார், முருகன், சுகமதி, ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சின்னச்சாமி, தங்கராஜ், மோகனபிரபு, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் உடனிருந்தனர்.