விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டியில் பாலின வள வானவில் மையம் அமைப்பு கலெக்டர் தகவல்


விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டியில் பாலின வள வானவில் மையம் அமைப்பு கலெக்டர் தகவல்
x

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் மற்றும் பண்ருட்டியில் பாலின வள வானவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய வட்டாரங்களில் பாலின வள மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலின வள மையங்கள் முன்மாதிரியாக அமைத்து குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு பிரத்யேகமான அமைப்பாக உருவாக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று வட்டாரங்களிலும் அதற்கான கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாலின வள மையங்களை நிர்வகிப்பதற்கு ஒரு மையத்திற்கு, ஒரு மேலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள பாலின சமுதாய வள வல்லுநர்கள் மூலம் பாலின வள மையம் செயல்படும். இந்த பாலின வள வானவில் மையமானது, பெண்களுக்கு ஊக்கம் அளித்து வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும், உறுதுணையாகவும் இருக்கும்.

ஆலோசனை மையமாக...

பெண்கள் பாதுகாப்பு, பாலின பிரச்சினைகள், புகார்கள் அதிகளவில் பதிவானால் தீர்வு காணும் ஆலோசனை மையமாக செயல்படும். தனிநபர் பாதுகாப்பு தனி உரிமை, எளிமையான அணுகுமுறை மூலம் பாலின வானவில் மையம் என்ற பெயரில் செயல்படும். இதில் பண்ருட்டி பாலின வள மைய மேலாளரை 04142-240020 என்ற எண்ணிலும், விருத்தாசலம் பாலின வள மைய மேலாளர் - 04143-294535 மற்றும் காட்டுமன்னார்கோவில் பாலின வள மைய மேலாளரை 04144-260343 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story