எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச்செயலாளர்கள் பாரதிராஜன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையான்குடி பேரூர் கழக செயலாளர் நாகூர் மீரா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட கழகச்செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், கழக அமைப்புச்செயலாளர் ரத்தினவேல், தலைமைக் கழக பேச்சாளர்கள் மதுரை இளவரசன், பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினா். மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் பேசும் போது, தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்தவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கருப்பையா, ஒன்றிய தலைவர் முனியாண்டி, துணை தலைவர் தனலட்சுமி, மாவட்ட பொருளாளர் ரத்தினம், மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைத்தலைவர் அப்துல் குலாம் ஒன்றிய கவுன்சிலர்கள் அண்டக்குடி சண்முகம், உஷாராணி ராஜா, முன்னாள் கவுன்சிலர் மலைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story