பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழு கூட்டம்
இளையான்குடி
இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளிவாசல் டிரஸ்டின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டிரஸ்டி தலைவர் மொகைதீன் காதர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சையது மாலிக் ஆண்டு செயல்பாடு அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ரியாஸ் அகமது ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். துணைத்தலைவர் பாசித் அகமது இளையான்குடி பகுதிகளில் போதை ஒழிப்பு தொடர் பிரசார இயக்கம் நடத்துவது சம்பந்தமாக எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பேசினார். பொதுக்குழுவில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகத்தை ஒழுங்குபடுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது, இளையான்குடி பெரிய கண்மாய் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி தண்ணீர் சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுப்பதும், தேர்தல் வாக்குறுதியில் இஸ்லாமியருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீதத்தை 5 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. நிறைவாக துணைச் செயலாளர் அன்சாரி நன்றி கூறினார்.