பொதுக்குழு கூட்டம்
காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆதி தமிழின குயவர்கள் வேளார் நல உரிமை சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆதி தமிழின குயவர்கள் வேளார் நல உரிமை சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் திருப்பதி மற்றும் செயலாளர் விஜயகுமார் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். திருநாவுக்கரசு வரவேற்றார். சங்க பொருளாளர் ஆதிநாராயணன் வருட ஆண்டறிக்கை வாசித்தார்.தொடர்ந்து சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சமூக சேவைகள் மற்றும் வருங்காலத்திற்கு செயல்படும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் முதியோர், ஆதரவற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் போதுமான வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மனப்பட்டி செல்வம், மகளிர் அணி கலைச்செல்வி மற்றும் கவிதா மற்றும் குமார் மற்றும் தேவராஜன், நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் காளைராஜன் நன்றி கூறினார்.