பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
x

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியில் பொது வினியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிகண்டன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர். பெரும்பாலான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story