பொது அறுவை சிகிச்சை முகாம்
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பொது அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அம்பரிஷ் தலைமையிலான மருத்துவர்கள் கலந்துகொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் குடல் இறக்கம், மூலம், பவுத்திரம், பித்தப்பை கல், தோல்கட்டி மற்றும் புற்றுநோய் கட்டி போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. முகாமில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story