கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்
அணைக்கட்டில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.
வேலூர்
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் கெங்கையம்மன் கோவிலில் 105-வது ஆண்டு திருவிழா 9-ந் தேதி தொடங்கியது. அதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்று இரவு 9 மணியளவில் நையாண்டி மேளம், கரகாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் விமான பூப்பல்லக்கில் உற்சவர் கெங்கையம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தாரைப்பட்டை, கொக்கலிக்கட்டை நடனத்துடன் முக்கிய வீதிகளில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. வழிநெடுகிலும் அம்மன் சிரசுக்கு பூஜைகள் செய்தும், ஆடுகள், கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12 மணிக்கு கெங்கையம்மன் கோவிலில் சிரசு பொருத்தப்பட்டதும், திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story