கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா
லத்தேரியில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது. அதையொட்டி அம்மன் சிரசு பட்டியூர் புற்றுக் கோவில் அருகில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்று அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண் திறக்கப்பட்டது.
மேலும் பொங்கலிடுதல், கூழ்வார்த்தல், கும்ப சோறு படைத்தல், அன்னதானம் வழங்குதல், தீபாராதனை, மாலைகள் சாத்துதல், இரவு வீதிஉலா, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
Related Tags :
Next Story