உயர்மின் கோபுர பணியை தொடர வேண்டும்
உயர்மின் கோபுர பணியை தொடர வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மடத்துக்குளம் செங்கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், 'தமிழ்நாடு மின்தொடமைப்பு கழகத்தின் தப்பக்குண்டு-அனிக்கடவு மின் திட்டத்துக்கு உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய அதிகாரிகள் கடந்த 2021-ம் ஆண்டு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்டனர். எங்கள் நிலத்துக்கான இழப்பீடு தொகை மறுமதிப்பீடு செய்து வழங்க கோரிக்கை வைத்தோம்.
மடத்துக்குளம் தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு இழப்பீடாக ஒரு தென்னை மரத்துக்கு ரூ.66 ஆயிரத்து 750 வழங்கப்பட்டு வருகிறது. இதே தொகையை எங்கள் தென்னை மரத்துக்கும் வழங்க வேண்டும். நிலத்தின் வழிகாட்டு மதிப்பு அதிகரித்துள்ளது. சந்தை மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்கள், மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்கி அதன்பிறகு திட்டப்பணியை தொடங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
-