'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகிகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை;போக்சோவில் ஆஸ்பத்திரி ஊழியர் கைது


இன்ஸ்டாகிராம் மூலம் பழகிகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை;போக்சோவில் ஆஸ்பத்திரி ஊழியர் கைது
x

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் ேபாக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு

கடத்தூர்

'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் ேபாக்சோவில் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

'இன்ஸ்டாகிராம்' மூலம்...

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் தருண்குமார் (வயது 21). இவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர் கோபி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியுடன் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை அவர் ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவரிடம் இருந்து அந்த மாணவி தப்பி வந்து விட்டார்.

கைது

பின்னர் இதுகுறித்து அந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Related Tags :
Next Story