இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஊத்துக்குளி அருகே வட்டாலப்பதி, சின்னேகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் இல்லாமல் 2, 3 தலைமுறையாக ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். ஊத்துக்குளி தாலுகாவில் வட்டாலப்பதியில் 43.88 ஹெக்டேர் நிலம், சின்னே கவுண்டன்வலசில் 31.96 ஹெக்டேர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலங்களை வீடுகள் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனையாக பிரித்து வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story