பழனிக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை


பழனிக்கு செல்லும் பாதயாத்திரை  பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை
x

பழனிக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை

திருப்பூர்

காங்கயம்,

காங்கயத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மற்றும் சேலம், எடப்பாடி, நாமக்கல் ஈரோடு, திருச்சங்கோடு, பவானி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் இருந்து நடைபயணமாக சுமார் 3 லட்சம் பக்தர்கள் காங்கயம் வழியாக பழனி தைப்பூசத்திற்கு செல்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் பக்தர்களுக்கு காங்கயம் போக்குவரத்து போலீசார் சார்பில் ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டது.

இதனால் இரவு நேர நடைப்பயணத்தின் போது ஒட்டப்பட்ட வில்லைகள் ஒளிருவதால் விபத்து ஏற்படாமலும் பக்தர்களின் பயணம் பாதுகாப்பானதாகும் அமைகிறது. மேலும் பக்தர்கள் இரவு நேர நடைப்பயணத்தின் போது சாலையின் நடுவே செல்லாமல் சாலையோரமாக செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

---


Next Story