அரசு ஆஸ்பத்திரியில் தீ வைக்கப்படும் குப்பை


அரசு ஆஸ்பத்திரியில் தீ வைக்கப்படும் குப்பை
x
திருப்பூர்

பல்லடம் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை புறநோயாளிகள் பிரிவு பின்புறம் உள்ள காலி இடத்தில் போட்டு அடிக்கடி எரித்து வருகின்றனர். இதில் மருத்துவ கழிவுகளும் போட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் பெண்கள் வார்டில் உள்ள நோயாளிகளுக்கு தும்மல், இருமல் போன்றவைகள் ஏற்படுகின்றன. எனவே மருத்துவமனை நிர்வாகம் குப்பைகளை எரிக்காமல், அகற்றுவதற்கான மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

-அர்ஜுனராஜ், பல்லடம்.


Next Story