பையர்நத்தம், ஏரியூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
தர்மபுரி:
பையர்நத்தம், ஏரியூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பையர்நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினருமான சரவணன், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி, தொடங்கி வைத்தார்.
இதேபோல் மெணசி, பூதநத்தம், ஆலாபுரம் ஆகிய பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தா குப்புசாமி, அருணாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணன், தாமோதரன், விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கோகுல்நாத், ஒன்றிய துணை செயலாளர் செல்வன், முன்னாள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தனேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், வங்கி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏரியூர்
ஏரியூர் ஒன்றியம் கோடிஅள்ளி, டீக்கடை, நரசிபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தர்மச்செல்வன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் சோலை மணி, வேலுமணி, ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் வைத்திலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், முன்னாள் சேர்மன் தென்னரசு, முன்னாள் துணை சேர்மன் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் முனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.