மாணவிக்கு பரிசு


மாணவிக்கு பரிசு
x

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்க 49-வது மகாசபை கூட்டம் கலையரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் சேனாபதி, பொருளாளர் கலியுகத்து அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க வளர்ச்சி குறித்து நெல்லை சங்க தலைவர் சிதம்பரம் செட்டியார், ராமையா செட்டியார், சங்க துணைத்தலைவர் சுப்ரமணியன், துணைச்செயலாளர் லட்சுமணன் ஆகியோர் பேசினார்கள்.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஞானபொற் கொடி லாவண்யா, உமா மகேஸ்வரி, மகாலட்சுமி, விஜய சுருதி, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் சுதன்குமார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சிவ சக்திவேல் முருகன் வரவேற்று பேசினார். முடிவில் நாராயணன் நன்றி கூறினார்.


Next Story