மாணவ- மாணவிகளுக்கு பரிசு


மாணவ- மாணவிகளுக்கு பரிசு
x

10, 12-ம் வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

வள்ளிமலை சுப்ரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் மாதம் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 6-ம் நாள் அன்று யானை வாகன உற்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி வள்ளிமலையில் உள்ள திருமண மண்டபத்தில் விழா கமிட்டி தலைவர் ஏ.பி.சண்முகம் தலைமையில் வரவு செலவு மகாசபை கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் கருணாநிதி ஆண்டு அறிக்கை வாசித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவு செலவு வாசித்தார்.

கூட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான விழா உத்தேச திட்டம் வகுத்தல்,‌ கட்டிட பணி மற்றும் நன்கொடை வசூல், உபயதாரர்களை கவுரவித்தல், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த வன்னிய குல ஷத்திரிய மாணவ- மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 5,000 ரூபாயும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 3,000 ரூபாயும், மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்பட்டது. முடிவில் கவுரவத் தலைவர் சுப்பிரமணியம் நன்றி கூறினார். பொருளாளர் கவுதமன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story